Saturday, 17 November 2018

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்  அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் ஓ ஓ ஓ......  அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும் அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக  நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக  பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக  நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக  மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட  மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட  அதை மண் மீது போட்டுவிட்டேன்  வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட  பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக  நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக  மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை  மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை  மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை  மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை  காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை  கல்யாணம் கொள்வதுமட்டும் என் வசமில்லை..என் வசமில்லை .............பல்லாக்கு.............  கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்  கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்  கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்  கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்  கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்  வெறும் கூடாக பூமியில் இன்னும்  வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் ...........பல்லாக்கு..

போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா

ஓஹொஹோ ஓஹோ ஹோ ஹொஹொஹோஓஓஓ போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா.  ஓஹொஹோ ஓஹோஹோ ஹோஓஓஓ ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ  வந்தது தெரியும் போவது எங்கே? வாசல் நமக்கே தெரியாது வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் மரணம் என்பது செலவாகும். போனால் போகட்டும் போடா ஆஆஆ போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா.   இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை இல்லையென்றால் அவன் விடுவானா? உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா? கூக்குரலாலே கிடைக்காது - இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது. போனால் போகட்டும் போடா ஆஆஆ  போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா. ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓ ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ  எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா? இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா? நமக்கும் மேலே ஒருவனடா - அவன் நாலும் தெரிந்த தலைவனடா - தினம் நாடகமாடும் கலைஞனடா. போனால் போகட்டும் போடா ஆஆஆ   போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா. ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓஓஹோஓ

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..  உயர்ந்த இடத்தில் இருக்கும் போது  உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது  உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..  வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனை போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..  நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..  படம் : சூரியகாந்தி

Sunday, 18 March 2018

சொடக்கு மேல

Thaanaa Serndha Koottam
Music Anirudh Ravichander
Lyrics Mani Amudhavan, Vignesh Shivan
Singers Anthony Daasan

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.
வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.
ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.
வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.
ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.

Friday, 15 May 2015

Vaseegara En வசீகரா என் நெஞ்சினிக்க

Vaseegara En

வசீகரா என் நெஞ்சினிக்க
Movie
Minnale (2001)
Music
Harris Jayaraj
Lyrics
Thamarai 



வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தீரும்… தீரும்…

தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

Sakkarai Nilavea சக்கரை நிலவே

Sakkarai Nilavea

சக்கரை நிலவே
Movie
Youth (2002)
Music
Mani Sharma
Lyrics
Vairamuthu 



சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எறித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்து கொண்டது என் தவறா
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா