Sunday 9 July 2023

வசீகரிக்கும் வான் நிலா ❤

 "பட்டினப்பிரவேசம்" படத்தில் ஒரு அழகான பாடலை எழுதி அசத்தினார் கவியரசர் கண்ணதாசன், அந்தப் பாடல்... ‘வான் நிலா நிலா அல்ல... உன் வாலிபம் நிலா’.

எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட மெட்டு... கவியரசர் கண்ணதாசனின் வரிகள்... எஸ்.பி.பி.யின் தேன் தடவிய குரல்... என மூன்றும் கலந்து முக்கனியாய் தித்தித்த பாடல்... இப்போதும் எப்போதும் தித்திக்கும் பாடல்...

பாடலின் தொடக்கத்தில் வரும் வயலின் நம்மை என்னவோ செய்யும். பாட்டு முழுவதும் வயலினின் ராஜாங்கம்தான். ‘நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா’ என்று எழுதினார் கவிஞர்.

‘வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா.. நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? என்பார். பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா? என்று கேட்பார். தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? என்ற சொல் வியக்கவைக்கும். தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?

அவள் காட்டும் அன்பிலா? என்று எல்லாவற்றையும் ‘லா’ போட்டு முடிப்பார்.
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? தீதில்லா காதலா ஊடலா கூடலா? அவள் மீட்டும் பண்ணிலா? என்பார். கூடவே, வயலினும் பாடிக்கொண்டிருக்கும். வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா? ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா?

சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா? என்று பாடும் போது, எஸ்.பி.பி. குழைவார். ‘அருளிலா’ எனும் போது சிலிர்ப்பார்.

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்? அதைச் சொல்வாய் வெண்ணிலா! என்று வியந்தும் மகிழ்ந்துமாக காதலையும் இசையையும் கொண்டு வந்து நமக்குள் கடத்திவிடுவார் எஸ்.பி.பி.

77ம் ஆண்டு,செப்டம்பர் 9ம் தேதி வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் ‘வான் நிலா நிலா அல்ல’ பாடல் தனி கிக். தனி சுகம். தனி சந்தோஷம். நமக்கும் இந்தப் பாடலுக்குமான தனி உறவு. பாடல் வெளியாகி, 45ஆண்டுகளாகின்றன.

இப்படியொரு பாடலை வேண்டுமென்று கேட்ட பாலசந்தர், அதற்கு அப்படியொரு டியூனை போட்டுக் கொடுத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், அழகான டியூனுக்கு அட்டகாசமாக பாடலை எழுதிக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன், காதலையும் கவிதையையும் குழையக்குழையக் குரலில் இழைத்து இழைத்துக் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்... !

கற்பனையின் உச்சத்துக்கே போய்விட்டது என்று நான் வியந்த தமிழ் திரைப்படப் பாடல்

 கற்பனையின் உச்சத்துக்கே போய்விட்டது என்று நான் வியந்த தமிழ் திரைப்படப் பாடல்




இந்தப் பாடலை ஜயிக்க இன்னொரு பாடல் வருமென்று எனக்குத் தோன்றவில்லை..
படம் : பலே பாண்டியா
இசை - விஸ்வநாதன் - ராமமுர்த்தி
பாடகர் : பி.சுசீலா
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ..
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மதுளங்காய் ஆனாலும் எனுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
ஓஓ…ஓ.ஓ.ஓ.. ஆ..ஆ..ஆ.ஆ…
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
னீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய்
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூடுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
வார்த்தை ஜாலம் புரிய அந்தக் கவியரசை மிஞ்ச யாருண்டு?

Saturday 17 November 2018

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

படம்: மன்மத லீலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1976

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? 
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன? 
உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு 
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு 
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு 
எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? 
உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும் 
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் 
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே 
காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை 
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை 
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் 
அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? 
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் 
இறைவன் கொடுத்த வரம்

சட்டி சுட்டதடா கை விட்டதடா

படம் - ஆலயமணி
இசை - விஸ்வநாதன் இராமமூர்த்தி
குரல் - சௌந்தரராஜன்
வரிகள் - கண்ணதாசன்


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும்  வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி... வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.... நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் - பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு... ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.. இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டனை ஆறு....

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

நல்லவர்க்கெல்லாம்... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை மனிதனம்மா மயங்குகிறேன் தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே நல்லவர்க்கெல்லாம்... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா