Wednesday 28 March 2012

அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே...



பாடல்: அத்திக்காய் காய் காய்
திரைப்படம்: பலே பாண்டியா  (1962)
இந்த பாடலில் நடித்திருப்பவர்கள் : சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி.

படியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, 
பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி


பல்லவி :
பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
          இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

‌ஆ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
         இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
         என்னுயிரும் நீயல்லவோ?
        அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

பெ : ஓஓஓ..ஓஓஓ..

சரணம் : 1 


பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
          கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

ஆ :  மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெ : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

பெ : ஓ.. ஓ... ஓ.. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 2 

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
         இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு :அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 3 

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
           ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
         என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
             இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 4 

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
        உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

1 comment:

  1. அத்திக்காய் காய் பாடல் மிக அருமையான பாடல். பாடலும் இசையும் சேர்ந்து எத்தனை முறை கேட்டாலும் சலிப்பைத் தருவதில்லை. இதில் தமிழின் சிறப்பும் உள்ளது. இத்தனைக் காய்கள் வந்திருந்தாலும் ஒன்றுகூட உண்மையான காயைக் குறிக்க வில்லை. இப்பாடல் குறித்து இந்துப்பெண்கள் தளத்தில் (indusladies.com) பாடலைப் பதிந்தவர் "இந்த அத்திக்காய்ப் பாடல் முழுக்க முழுக்க ஒரிசினல் வரிகள். கண்ணதாசனின் 100% சொந்த கற்பனைக் கவிதை. வேறு எந்த இலக்கியத்திலிருந்தும் எடுத்தாளப்பட்டவை அல்ல. இது ஒன்றே போதும் அவர் கவிதையின் மாட்சி விளக்க!" எனக் குறிப்பிட்டிருப்பார். கண்ணதாசன் தமிழ்ப்பாடல்களை எடுத்தாண்டு எளிமையாய் மேலும் சுவை கூட்டித் தருவதில் வல்லவர். இந்தப்பாடல் கணவன் மனைவியரிடையே ஊடல் உள்ளபோது விருந்தினர் வருகிறார். எனவே, மறைமுகமாக மனைவியிடம் கணவன் என்னென்ன சமைக்க வேண்டும் என்பதுபோல் மறைமுகமாக ஒரு பாடலைக் கூறுவார். அதில் அத்திக்காய் காய் காய் காய் (என் மீது சினம் கொள்ளாதே).....உள்ளம் இளகமாட்டாயோ, பேச மாட்டாயோ என மனைவிக்கு மட்டும் புரியுமாறும் விருந்தினருக்கு அத்திக்காய் , மிளகு, சுரைக்காய் முதலியவற்றைச் சமைக்கச் சொல்வதுபோலும் இருக்கும். முழுப்பாடல் வரிகள் மறந்து விட்டன. 60 களில் குமுதம் இதழில் ஒருவர் பேராசிரியர் சி. இலக்குவனார் கூட்டம் ஒன்றில் இருபொருள்பட உள்ள இப்பாடலைக் கூறியதை எடுத்து எழுதியமை, பெட்டிச்செய்தியாய் வந்திருக்கும். கண்ணதாசன் பாராட்டிற்குரியவர்தான். அதற்காக முழுமையும் அவர் சிந்தனை எனத் தவறாகக் கூறக் கூடாது என்பதால் குறிப்பிடுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி.

    ReplyDelete